Translate

Friday 12 August 2016

தமிழ்மாநில AIBSNLPWA மாநாடு சிறப்பான ஏற்பாடுகள் 
நன்றி:கோவை வலைப்பதிவு -N.MOHAN Web Master
அகில இந்திய BSNL  ஓய்வூதிய  நல சங்கத்தைசார்ந்த மத்திய ,மாநில நிர்வாகிகளே , சார்பாளர்களே ,பார்வையாளர்களே ,சிறப்பு அழைப்பாளர்களே , தோழமை சங்க நிவாகிகளே  உங்கள் அனைவரையும் AIBSNLPWA   - வின் ஐந்தாவது தமிழ் மாநில மாநாட்டு வரவேற்பு குழு அன்புடன் வரவேற்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நம் மத்திய சங்கத் தலைவர் தோழர் P.S. இராமன் குட்டி, துணைத்தலைவர்  தோழர் Dகோபாலகிருஷ்ணன் , பொதுக் செயலாளர் தோழர் G நடராஜன் , துணை  பொதுச் செயலாளர்  அமரர் தோழர் சித்து சிங் ஆகியோரின் சீரிய தலைமையில் , மத்திய உதவி செயலாளர் தோழர் கங்காதர ராவ் , கர்நாடக மாநில செயலர் தோழர் செங்கப்பா , நம் மாநில தலைவர் தோழர் K.முத்தியாலு, மாநில செயலர் தோழர் v இராமராவ் ஆகியோரின் பெரு முயற்சியாலும் , மத்திய அமைச்சர் மாண்புமிகு  அனந்த குமார் அவர்களின் பேருதவியினாலும் 78.2 சதவீத இணைப்பு ஓய்வூதியம் மற்றும் நிரந்தர ஓய்வூதியங்களின் மாற்றங்கள் ஆகியவைகளை நிரந்தரமாக பெற மத்திய அரசின் உத்தரவுகளை போராடி பெற்றோம் . இந்த சுழ்நிலையில் தமிழ் மாநில மாநாடு கோவையில் வெற்றிகரமாக நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன .

கோயம்புத்தூர் என்றால் பஞ்சாலைகள் நிறைந்த தொழில் நகரம் மற்றும்  இந்தியாவின்   "மான்செஸ்டர் " என்பது அனைவரின் மனதிலும் நினைவுகள் உதித்தெழும் . கோவை நகரம் வெள்ளியங்கிரியிலிருந்து மருத  மலை கடந்து கணுவாய் வரை வில்லாக வளைந்துள்ள மேற்கு தொடர்சி மலை க்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதால் எப்போதும் குளிர்ச்சியாக மிதமான தட்ப வெப்ப நிலை நிலவும்.எந்தவிதமான தொழில் நுட்பங்களையும் முதலில் உள்வாங்குவதால் இங்குதான் அதிக சக்தி வாய்ந்த மோட்டர்களும், பம்ப் செட்டுகளும் தயாரிக்கப்பட்டு இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் மிக அதிகமாக விற்கப்படுகின்றன . இரும்பு வார்ப்புத் தொழிலுக்கும் கோவை நகரம் முக்கியத்துவம் அடைந்துள்ளது. 

ஒரு காலகட்டத்தில்  கோவையிலிருந்து வெளி மாநிலங்களுக்குப் போய் மருத்துவம்,பொறியியல் பட்டப்படிப்புகள் படித்து வந்த காலம் போய் , தற்சமயம் வெளி மாநிலங்களில் இருந்து ஏன் உலகின் பல பகுதிகளிலிருந்தும் மாணவ மாணவியர் பட்ட மேற்படிப்பு படிக்க கோவை நோக்கி வருகின்றனர். கோவை கல்லூரிகளின் கல்வித்திறன் உலகளவில் மிகவும் பிரசித்தமானது.

கோவையில் அமைந்துள்ள உலகத்த தரம் வாய்ந்த மலிவான மருத்துவ வசதிகள் கொண்ட பிரமாண்டமான மருத்துவ மனைகளில்  அளிக்கப்படும் உயர்தர சிகிசைக்களுக்காக நம் நாட்டின் பல இடங்களிலிருந்தும், பல் வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் கோவை நோக்கி வந்து நோய் நீங்கி பலன் அடைந்து திருப்தியுடன்  செல்கின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக பெரு நகரமாக கோவை விளங்குகிறது. இதமான சுழ்நிலை காரணமாக நம் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு வந்து குடியயேறி அமைதியாக வாழ்கின்றனர். மூத்த குடிமக்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள் பல சிறப்பாக இயங்கி மூத்தோர் நலம் காத்து வருகின்றன .

வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் அகில உலக புகழ் வாய்ந்த ஈஷா யோகா மையத்தில் மன நலம் உடல் நலம் பேண யோகா மையமும் வழிபாட்டுக்காக மிக பிரமாண்டமான தியான லிங்கமும் மக்களின் மனதை மிகவும் ஈர்க்கிறது  வெள்ளையர் ஆட்சி காலத்தில் 
இயங்கத்தொ டங்கிய வேளாண் கல்லூரி தற்சமயம் கோவை அண்ணா விவசாய பல்கலைக் கழகமாக உயர்நிலை பெற்று சிறப்பாக இயங்கி பசிப்பிணி நீக்கும் பணியில் தீவிரமாக  ஈடுபட்டுள்ளது.. அது போல கோவை வனக்  கல்லூரி வன மேம்பாட்டிற்கும், வன விலங்குகளின் பாதுகாப்பிற்கும் அரணாக விளங்குகின்றது.நகரின் உள்ளேயும் நகரைக் சுற்றியும் அமைந்துள்ள பல்வேறு நீர் நிலைகள் , குளங்கள் இந்நகருக்கு அழகும் வளமும் சேர்ப்பது மட்டுமல்லாமல் நகரின் நீர்வள த்தையும் பாதுகாக்கின்றன 

 உலகமயமாக்கலின் முதற்கட்டமாக பீளமேடு மால் மற்றும் வட கோவை மால் என பிரமாண்டமான மால்கள் எழுந்துள்ளன 

நாயன்மார்களால் பாடப்பட்ட பேரூர் (பட்டீ ஸ்வரம்) சிவன் கோவில்  சிற்ப கலை நுட்பம் பிரசித்தமானது. சித்தர்கள்  வழிபட்ட  அருள்மிகு மருதமலை முருகன் , கோவை ரயில் நிலையம் அருகே உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன்  கோவில் ,  கோவையின் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. மலை அரசியாம் உதகமண்டலம் செல்ல கோவைதான் நுழைவாயில் .

மிகப்பெரிய நான்கு தொலைதூர பேருந்து நிலையங்கள் ( சிங்காநல்லூர், உக்கடம், சாயிபாபா காலனி மற்றும் காந்திபுரம் ) கோவையின் தரமான தரை வழி போக்குவரத்திற்கு  ஓர் எடுத்துக்காட்டு.

தமிழ் மாநில தொலைத்தொடர்பு சேவை வருவாயில் கோவை SSA   தான் முன்னிலை வகித்து சிறப்பாக இயங்கி வருகிறது.

இதைப்போன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள கோவை நகரம் முன்னணித் தலைவர்களான முத்தியாலு, ராமராவ் D. கோபாலகிருஷ்ணன்    G. நடராசன் ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலின் பேரில் 

ஆகஸ்டு மாதம் 23 மற்றும் 24 தேதிகளில் ( செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில்) ஐந்தாவது தமிழ் மாநில மாநாடு கோவை ராம் நகர் சத்திய மூர்த்தி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் , மகர ஜோதி ஹாலில் சீரும் சிறப்புமாக வெற்றி மாநாடாக நடை பெற உள்ளது. 

,மாநாடு நடைபெறும் இரண்டு நாட்களுக்கும் சிறப்பான அறுசுவை உணவும், மாநாடு நடைபெறும் இடத்தில்  தங்கும் இடமும் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..அது தவிர சார்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்குவதற்கு வசதியாக சத்தியமூர்த்தி சாலையில் உள்ள  கமலம் துரைசாமி கல்யாண மஹாலிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகளிர் தங்க தனி இட வசதி உண்டு .

இத்தருணத்தில் AIBSNLPWA - வை  சார்ந்த  மத்திய,  மாநில, மாவட்டங்களைக் சார்ந்த தலைவர்கள் ,சார்பாளர்கள், பார்வையாளர்கள் தோழமை சங்க நிர்வாகிகள் அனைவரையும் மாநாட்டில் தவறாமல் கலந்து கொண்டு வெற்றி பெற செய்ய தங்களின் ஒத்துழைப்பினை நல்கிட மாநாடு வரவேற்பு குழு அன்புடன் வேண்டுகிறது.

                                   மாநாடு நடைபெறும் இடம் 

  ஸ்ரீ அய்யப்பன் பூஜை சங்கம் ,மகர ஜோதி   ஹால், சத்திய மூர்த்தி ரோடு ராம்நகர்                                                       
                                       மாநாடு நடை பெரும் தேதிகள்     

 ஆகஸ்டு 23 மற்றும் 24 ( செவ்வாய் மற்றும்   புதன் கிழமைகள்)                                                                      
                                       தங்குமிடம்                            

கமலம் துரைசாமி கல்யாண மஹால் 
சத்திய மூர்த்தி ரோடு ராம்நகர் கோவை 
( காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்  அருகில் )                                                           
குறிப்பு:  காந்திபுரம் , கோவை ரயில் நிலையம் மற்றும் ஏனைய இடங்களிலிருந்து மாநாடு நடைபெறும் இடம் வந்து சேர வசதியாக , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வரைபடம் உதவிகரமாக இருக்கும்.

நன்றி !    வணக்கம் !!
தோழமை வாழ்த்துக்களுடன் 

பி அருணாசலம் ,
தலைவர், மாநாடு வரவேற்பு குழு,
94430 59011.

ஆர் திருவேங்கடசாமி ,
மாவட்ட செயலர்.
94871 64321

கே.சிவகுமாரன்
 பொருளாளர் , மாநாடு வரவேற்பு குழு 
   94861 05119


மாநில பொறுப்பாளர்கள் 
தோழர்           சி பழனிச் சாமி    94435 77344
தோழியர்      k சிவகாம சுந்தரி  94439 98034

                                        சுற்றுலா ஏற்பாடுகள் 

கோவையைக் சுற்றியிருக்கும் மிக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஈச்சநாரி விநாயகர் கோவில், தொன்மை மிகு பேரூரில் அமைந்துள்ள அருள்மிகு பட்டீஸ்வரம்  கோவில், அருள்மிகு மருதமலை முருகன் கோவில், நகரின் மத்தியில் அமைந்துள்ள அருள்மிகு கோனியம்மன் கோவில், அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில், மேற்கு  தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள  அருள்மிகு வெள்ளியங்கிரி சுவாமி ஈஷா யோகா  மையம்  மற்றும் தியான லிங்கம் மற்றும் ஊட்டி ,குன்னுர் ஆகிய இடங்களை கண்டு மகிழ விரும்பும் தோழர்கள் முன்னதாகவே நம் மாநாட்டு வரவேற்பு குழுவினருடன் தொடர்பு கொண்டால் தகுந்த ஏற்பாடுகள் செய்து கொடுக்க வசதியாக இருக்கும்.

                                        காந்திபுரம் பேருந்து நிலையதிலிலுருந்து   

(A)  ஈச்சநாரி விநாயகர் கோவில்  14கி.மீ                                                              (பேரூர் பட்டீஸ்வரர்  கோவில் வழி )
(B)   கோனியம்மன் கோவில் 9.5 கி.மீ 
(C)   மருதமலை முருகன் கோவில் 13.7 கி.மீ                   
(D)    தண்டு மாரியம்மன் கோவில்  2 கி.மீ 
(E)   கோனியம்மன் கோவில்  3.6 கி.மீ 
(F)   பூண்டி கோவில்  வழி பேரூர் ஈஷா  34 கி.மீ 
(G)  ஈஷா யோகா மையம்   வழி பேரூர்  32.2 கி.மீ 
(H)  கோவை குற்றாலம் வழி  ,ஈஷா   39 கி.மீ 


No comments:

Post a Comment