சில முக்கிய அம்சங்கள்:
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் 01-01-2016 முதல் அமுல் படுத்தப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55% சதவீத ஊதிய உயர்வு
(ஊதியம்: 16% சதவீதம் - இதர படிகள்: 63% சதவீதம்)
ஓய்வூதியர்களுக்கு 24% சதவீத ஓய்வூதிய உயர்வு.
குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18,000/- (தற்போது ரூ. 7000/-)
அதிக பட்ச ஊதியம் ரூ. 2,50,000/- (தற்போது ரூ. 90,000/-)
தர ஊதியம் (Grade Pay) ரத்து.
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ. 9000/- (தற்போது ரூ. 3500/-)
புதிய ஊதியம் பொருத்துவதற்கான கணக்கீடு முறை:
(தற்போதைய ஊதியம் + தர ஊதியம் (7-வது ஊதியக்குழுவில் ரத்து செய்யப்பட்டுள்ளது) X 2.57)
ஆண்டு உயர்வுத் தொகை 3% சதவீதம் (மாற்றம் இல்லை)
ஏற்கனவே அமுலில் இருந்த 196 படிகளில் 52 படிகள் ரத்து செய்யப்படும். மேலும் 36 படிகள் தற்போதைய அல்லது புதிய படிகளுடன் இணைக்கப்படும்.பதவி உயர்வுக்கான ஊதியம் பொருத்துதலில் (Fixation on Promotion) எந்த வித மாற்றமும் இல்லை.
வீட்டு வாடகைப்படி X,Y,Z நகரங்கள் முறையே 24%, 16%, 8% எனவும் கிராக்கிப்படி 50% உயர்ந்தால் 27%, 18%, 9% எனவும் கிராக்கிப்படி 100% உயர்ந்தால் 30%, 20%, 10% எனவும் மாற்றப்பட்டுள்ளது.
கிராக்கிப்படி (Dearness Allowance) Formula-வில் எந்தவித மாற்றமும் இல்லை.
போக்குவரத்துப்படி A, A1 நகரங்களுக்கு 1 & 2, 3 to 8, 9 & above முறையே ரூ. 1350/-, 3600/-, 7200/- மற்ற நகரங்களுக்கு 1 & 2, 3 to 8, 9 & above முறையே ரூ. 900/-, 1800/-, 3600/- என மாற்றப்பட்டுள்ளது.
தற்காலிக விடுப்பு (Casual Leave)-இல் எந்தவித மாற்றமும் இல்லை.குழந்தை பராமரிப்பு விடுப்பு,
(CCL) எடுக்கும் பெண் ஊழியர்களுக்கு முதல் 365 நாட்களுக்கு 100% முழு ஊதியமும், அடுத்த 365 நாட்களுக்கு 80% ஊதியமும் வழங்கப்படும்.
மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும்.
மகப்பேறு விடுப்பில் (Maternity Leave) எந்தவித மாற்றமும் இல்லை.LTC மற்றும் Leave Encashment-இல் எந்தவித மாற்றமும் இல்லை.
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகம்.
குடும்பக் கட்டுப்பாடு படி (Family Planning Allowance) ரத்து.ஓய்வூதியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மருத்துவப்படி (FMA) மாதம் ரூ. 500/- வழங்கப்படும்.குழுக் காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீட்டு முறையே 15 லட்சம் (மாத பிடித்தம்: ரூ.1500/-), 25 லட்சம் (மாத பிடித்தம்: ரூ.2500/-), 50 லட்சம் (மாத பிடித்தம்: ரூ.5000/-) என உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி இல்லாத அனைத்து கடன் திட்டங்களும் ரத்து செய்யப்படும்.பணிக்கொடை உச்சவரம்பு ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்வு. அத்துடன் அகவிலைப்படி 50% சதவீதம் உயருகின்ற பொழுது பணிக்கொடை உச்சவரம்பு 25% சதவீதம் உயரும்.
வட்டியுடன் கூடிய வீட்டுக்கடன் ரூ. 7.50 லட்சத்தில் இருந்து ரூ. 25 லட்சமாக உயர்வு.
இந்த ஊதிய உயர்வால் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும்,
52 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் அடைவார்கள்.