அகில இந்திய BSNL ஓய்வூதியர்
நலச்சங்கம்.
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
(முகவரி: 36 & 42, வள்ளலார் தெரு,அழகப்பாபுரம்,காரைக்குடி-630003)
94871 67644 94866 12100
இராமநாதபுரத்தில் புதிய கிளை துவக்கம்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தின் பகுதிக்கூட்டம் இராமநாதபுரத்தில் 07.05.2016 அன்று காலை 10:30 மணியளவில் தோழர்.S.சண்முகம் Rtrd JTO அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச்செயலர் தோழர் P.முருகன் பரிந்துரைக்க, மாநில அமைப்புச்செயலர் தோழர் N.நாகேஸ்வரன் ஆமோதிக்க, அகில இந்திய துணைப் பொதுச்செயலர் தோழர் அருணா அவர்கள் இராமநாதபுரத்தில் புதிய கிளையைத் துவக்கிவைத்தார்..
ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதியநிர்வாகிகள்
1
|
தலைவர்
|
தோழர்.S.சண்முகம்
|
Rtrd JTO
|
இராம்நாட்
|
2
3
4
|
துணைத்தலைவர்
|
தோழர் C.சொர்ணமுத்து
|
Rtrd TM
|
இராமேஸ்வரம்
|
தோழர் U.விஜயராமு
தோழர். D.தனசேகரன்
|
Rtrd TTA
Rtrd JTO
|
கீழக்கரை
இராம்நாட்
| ||
5
|
செயலர்
|
தோழர் .C.இராமமூர்த்தி
|
Rtrd TTA
|
இராமேஸ்வரம்
|
6
7
|
துணைச்செயலர் 1
|
தோழர். A.சேகர்
|
Rtrd TM
|
இரகுநாதபுரம்
|
தோழர். M.பாலன்
|
Rtrd TM
|
பாம்பன்
| ||
8
|
பொருளாளர்
|
தோழர். A.முனியசாமி
|
Rtrd TM
|
இராம்நாட்
|
9
|
துணைப்பொருளாளர்
|
தோழர் .C.நம்புராஜன்
|
Rtrd STS
|
இராம்நாட்
|
10
11
12
13
14
15
16
|
அமைப்புச்செயலர்
|
தோழர். S.சந்திரன்
|
Rtrd TM
|
இராம்நாட்
|
தோழர். S.தங்கராஜ்
|
Rtrd TM
|
இராம்நாட்
| ||
தோழர். V.வையமாணிக்கம்
|
Rtrd TM
|
இராம்நாட்
| ||
தோழர் .P.காந்தி
|
Rtrd TM
|
இராம்நாட்
| ||
தோழர் .R.வெங்கட்ராமன்
|
Rtrd STS
|
இராம்நாட்
| ||
தோழர். K.சாத்தையா
|
Rtrd TM
|
இராம்நாட்
| ||
தோழர். V.வீரையா
|
Rtrd STS
|
இராம்நாட்
| ||
தணிக்கையாளர்
|
தோழர். N.பாரதிதாசன்
|
Rtrd TMO
|
இராம்நாட்
|
ஏற்கெனவே நான்கு ஆயுள்சந்தா உறுப்பினர்கள் உள்ள இக்கிளையில், கிளை துவக்கப்பட்ட இந்நாளில் மேலும் 16 உறுப்பினர்கள் ஆயுள்சந்தா செலுத்தியுள்ளனர் .காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தின் ஆயுள்சந்தா உறுப்பினர் எண்ணிக்கை 100-ஐ தொட்டது.
அகில இந்திய துணைப்பொதுச்செயலர் தோழர். அருணா அவர்கள், புதிய கிளையையும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும் வாழ்த்திப்பேசினார்.
78.2 பிரச்னையில் எப்படியெல்லாம் காலதாமதப்படுத்தப்பட்டது என்பது பற்றியும் நமது சங்கம் எடுத்துக்கொண்ட பல்வேறு முயற்சிகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். இந்த சாதனைக்குரியவர்கள் நமது அகில இந்தியத் தலைமை மற்றும் மத்திய அமைச்சர் மாண்புமிகு அனந்தகுமார் மட்டுமே என்றும் வேறுயாரும் சொந்தம் கொண்டாடமுடியாது என்றும் குறிப்பிட்டார்.
நமது அடுத்த இலக்கு ஊதியமாற்றம் என்றும் ஏழாவது ஊதியக்கமிட்டி நம்மைப்பற்றி சொல்லாமல் விட்டாலும் இன்னும் வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கான முயற்சிகளில் நமது அகில இந்தியத்தலைமை முனைப்பு காட்டிவருவது பற்றியும் விரிவாக விளக்கினார்.
குடும்பஓய்வூதியம் பெறுகிறவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்கள் வாங்கும் குடும்ப ஓய்வூதியம் குறைவாக கொடுக்கப்பட்டு வருகிறது என்பதை சில உதாரனங்களுடன் சுட்டிக்காட்டி, குடும்பஓய்வூதியர்களைக் கண்டறிந்து அவர்கள்பெறும் ஓய்வூதியத்தை சரிபார்க்கவேண்டியதும், குறைவாக இருப்பின் அவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய ஓய்வூதியத்தை நமது மாநிலசங்கம் மூலம் பெற்றுத்தர இக்கிளை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
புதியசெயலர் தோழர் இராமமூர்த்தி நன்றி கூறும்பொழுது மாவட்ட மாநாட்டை இராமநாதபுரத்தில் விரைவில் நடத்துவதற்கு ஒப்புதல் தெரிவித்தார்.
No comments:
Post a Comment